குமரகுருபரர் அருளிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் காப்பு விநாயக வணக்கம் கார்கொண்ட கவுண்மதக் கடைவெள்ள முங்கட் கடைக்கடைக் கனலு மெல்லை கடவாது தடவுக் குழைச்செவி முகந்தெறி கடைக்கா றிட்ட வெங்கோன் போர்கொண்ட வெண்டோ ட்பொலன்குவடு பொதியும்வெண் பொடிதுடி யடித்து வைத்துப் புழுதியாட் டயராவொ ரயிராவ ணத்துலவு பொற்களிற் றைத்து திப்பாந் தார்கொண்ட மதிமுடி யொருத்தன் றிருக்கண்மலர் சாத்தக் கிளர்ந்து பொங்கித் தவழுமிள வெயிலுமழ நிலவுமள வளவலாற் றண்ணென்று வெச்சென்று பொன் வார்கொண்ட டணிந்தமுலை மலைவல்லி கர்ப்பூர வல்லியபி ராம வல்லி மாணிக்க வல்லிமர கதவல்லி யபிடேக வல்லி சொற் றமிழ் தழையவே.